கங்கைப் பகுதியில் தொடர்ந்து சடலங்கள் வீசப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதை அடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த உத்தரவினை அடுத்து கங்கை நதிப் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக கங்கை ஆற்றில் சடலங்கள் வீசப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சடலங்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளவர்களுடையதாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதன்காரணமாக கொரோனா தொற்றின் பரவல் தீவிரமடையும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஆற்றில் சடலங்கள் மிதப்பதால் தண்ணீரின் தரம் பயன்பாடு குறித்து நதிநீர் தூய்மைப்படுத்தும் குழுவினருடன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து ஆய்வுகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.