மாலேயில் நடந்த குண்டுத் தாக்குதலில் படுகாயம் அடைந்த மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொகமட் நசீம் பெர்லினில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உந்துருளியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து உடலில் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய மொகமட் நசீம் மேலதிக சிகிச்சைக்காக பெர்லினுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
அங்கு அவரது தலை, மார்பு, வயிறு, முதுகு, கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மோசமான காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, எழுந்து நடமாடுகின்ற அளவுக்கு குணமடைந்துள்ளார்.
அவரது உடலில் காணப்படும் காயங்கள் மற்றும் அறுவைச் சிகிச்சை தழும்புகளுடன் கூடிய படங்களை அவரது கீச்சகத்தில் வெளியிட்டுள்ள உறவினர்கள், எழுந்து நடைப்பயிற்சி செல்லும் படத்தையும் வெளியிட்டுள்ளனர்.