சிறிலங்காவில் மேலும் 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 275 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில், 63 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 42ஆயிரத்து 746ஆக அதிகரித்துள்ளது.