ஒன்ராறியோவில் இந்த ஆண்டு கோடைகால முகாம்களை மீளத் திறப்பதற்கு மாகாண முதல்வர் டக் போர்ட் பச்சைக் கொடி காண்பித்துள்ளார்.
மிசிசாகாவில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு நேற்று சென்று பார்வையிட்ட போதே அவர் முதல்வர் டக் போர்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதிகளவு ஒன்ராறியர்கள் கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றிருப்பார்கள் என்பதால், கோடைகால முகாம்களை நடத்தக் கூடியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘அதிகளவு மக்கள் முன்வந்து, தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதன் மூலம், விரைவாக எம்மால் திறக்க முடியும்.
வழக்கமாக ஜூலை 3ஆம் நாள், கோடைகால முகாம்கள் திறக்கப்படும். அதற்காக மக்கள் மிகப் பெரிய பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்






