ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் கருணை மனு தொடர்பாக மாநில தகவல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது கருணை மனுவில் நிலை குறித்து தகவல் கோரி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பிய மனுவை பரிசீலிக்குமாறு உத்தரவிடக் கோரி பேரறிவாளன் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், , பேரறிவாளனின் கருணை மனு தொடர்பாக எதிர்வரும் 7-ம் திகதிக்குள் பதில் அளிக்குமாறு, மாநில தகவல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.