தமிழ்நாட்டின் (Tamil Nadu) கள்ளக்குறிச்சியில் (Kallakurichi) கள்ளச்சாராயம் அருந்தியதால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், 80 பேர் வரை கள்ளக்குறிச்சி, புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கள்ளக்குறிச்சி – கருணாபுரம் குடியிருப்பை சேர்ந்த 26 பேர் நேற்று (19) காலையில் வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற பிரச்சனைகளால் திடீரென்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் விசாரணை
இதையடுத்து, குறித்த நபர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த நபர்கள் பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அருந்தியுள்ளனர் என்பதுடன் சாராய விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.