முக்கிய செய்திகள்

22ஆண்டுகளுக்குப்பின் இணையும் கமல், பிரபுதேவா

349

மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இன்று முன்னணி இயக்குனர் அந்தஸ்திற்கு உயர்ந்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

அவரது இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசிற்குத் தயாராக உள்ளது. அப்படத்தினைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படம் ‘விக்ரம்’.

நடிகர் கமல்ஹாசன் நாயகனாக நடிக்க உள்ள இப்படத்தின் அறிமுக டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

இந்த நிலையில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், ‘விக்ரம்’ படத்தின் பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் நடிகர் பிரபுதேவாவை நடிக்கவைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கமல் மற்றும் பிரபுதேவா இணைந்து ‘காதலா காதலா’ படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

விக்ரம் படத்தில் நடிகர் ஃபகத் பாசிலை நடிக்க வைக்க முதலில் பேச்சுவார்த்தை நடந்தது. கொரோனா காரணமாகத் தடைப்பட்டுள்ள பிற படங்களில் அவர் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாகக் கூறுகின்றனர் நமக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்கள்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *