சிறிலங்காவில் 22 கிலோ எடையுள்ள அரிய வகையான மாணிக்க கல் ஒன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
அவிசாவளை, தெஹியகல பகுதியில் உள்ள இரத்தினக் கல் சுரங்கத்திலேயே இந்த பாரிய மாணிக்க கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த மாணிக்க கல் நீர்க்குமிழியைக் கொண்டிருப்பதால், மிகவும் விலைமதிப்புடையது என்றும், கூறப்படுகிறது.
ஒரு இலட்சம் கரட்டுக்கும் அதிகமான எடையுடைய இந்த அரியவகை மாணிக்க கல்லின் வணிகப் பெறுமதி இன்னமும் மதிப்பிடப்படவில்லை என்றும், தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது.