முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சி அறிமுகம்

245

எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சி அறிமுகம் செய்துள்ளது.

சென்னை ராயப்பேட்டை வை.எம்.சி.ஏ. திடலில் இன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் அறிமுகம் செய்யப்பட்டனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதற்காக 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ள வேட்பாளர்களை அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவு செய்துள்ளார்.

பெண்களுக்கு ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் சரிசமமாகத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்துவரும் சீமான், இந்த தேர்தலிலும் 117 பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.

இதேவேளை, சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *