மில்லியன் கணக்கான கொரோனா தொடர்தேச்சியான பரிசோதனைகளை சேமித்து வைப்பதற்கான புதிய கட்டமைப்பு அவசியமாக இருப்பதாக பொதுசுகாதாரத்துறை தெரிவிக்கின்றது.
தற்போதைய நிலைமையில் பரிசோதனை முடிவுகள் கணணிமயமாக்கப்பட்டுள்ளபோதும் தொடர்தேச்சியான பரிசோதனை முடிவுகளை சேமிப்பதற்கு பொருத்தமான ஏற்பாடுகள் காணப்படவில்லை.
குறிப்பாக மாகாண ரீதியில் இத்தகைய பரிசோதனை முடிவுகளை கண்டறிவதற்கு உரிய கட்டமைப்பை விரைவில் ஸ்தாப்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மாகாண அளவில் தொடர்தேச்சியான பரிசோதனைகள் அதிகரிப்பட்டுள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.