3.8மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகள் இந்த வாரம் திட்டமிட்ட திகதிகளில் கனடாவை வந்தடையவுள்ளதாக தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் தலைமை அதிகாரியான ஜெனரல் டேனி ஃபோர்டின் (Danny Fortin) தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாகாண ரீதியான விநியோகங்களும் எவ்விதமான தடைகளுமின்றி முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் இணைவழி மூலமான முற்பதிவுகளே அதிகமாக காணப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் தடுப்பூசிக்கான கோரிக்கைகள் தொடர்பான முறையான பரிசோதனைகளின் பிரகாரமே விநியோகச் செயற்பாடுகள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.