வரும் ஓகஸ்ட்டில் மாகாண சபைத் தேர்தல்கள்

45

மாகாண சபைத் தேர்தல்களை வரும் ஓகஸ்ட் மாதம் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கூடிய விரைவில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கு, ஆளும்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மாகாண சபை தேர்தல்களை புதிய முறையில் நடத்துவதா அல்லது பழைய முறைப்படி நடத்துவதா என்பது குறித்த இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *