முக்கிய செய்திகள்

431 டொலர்கள் பட்டியலை முதல்வருக்கு அனுப்பிய உணவக உரிமையாளர்

35

ஒன்ராரியோவின் மேற்குப் பகுதியில் உள்ள உணவு விடுதியொன்று மாகாண முதல்வர் டக்போர்ட்டுக்கு 431டொலர்களை தமக்கு வழங்க வேண்டும் என்று பட்டியலொன்றை அனுப்பியுள்ளது.

அன்ட்லர் கிச்சன் அன்ட் பார் (Antler Kitchen & Bar )நிறுவனத்தின் இணை உரிமையாளர் மைக்கேல் ஹண்டர் (Michael Hunter) என்பவரே இவ்வாறு முதல்வருக்கு பட்டியலை அனுப்பி வைத்தவர் ஆவார்.

ஒன்ராரியோவில் உள்ள உணவகங்கள் மீளத்திறக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தாம் உணவகத்தை திறந்ததாகவும் இரண்டு சிலிண்டர் அளவு பியர் குடிபாணத்தை கொள்வனவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஒருவாரம் ஆகுவதற்குள்ளேயே மீண்டும் முடக்கல் நிலை அறிவிக்கப்பட்டுள்ளதால், கொள்வனவு செய்ய பியர் குடிபாணத்திற்கான செலவை முதல்வர் போர்ட் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *