49 நாட்களில் படகு மூலம் உலகை சுற்றி சாதனை

926

பிரான்சை சேர்ந்தவர் தாமஸ் கோவில்லே (48). இவர் கடல் பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் மிகுந்தவர். இவர் படகு மூலம் உலகை சுற்றி வர திட்ட மிட்டார்.

அதற்காக 31 மீட்டர் நீள படகில் தனி ஆளாக பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தை முடித்த அவர் 49 நாட்களில் மேற்கு பிரான்சில் உள்ள பிரெஸ்ட் துறை முகத்துக்கு மீண்டும் திரும்பினார்.

இவர் 49 நாட்கள், 3 மணி 7 நிமிடம் மற்றும் 38 வினாடிகளில் உலகை சுற்றி முடித்தார். அதற்கு முன்பு கடந்த 2008-ம் ஆண்டு பிரான்சிஸ் ஜோயன் என்ற பிரெஞ்சுக்காரர் 57 நாட்கள் மற்றும் 13 மணி நேரத்தில் படகில் உலகை சுற்றி வந்தார். தற்போது அவரை விட 8 நாட்கள் முன்னதாகவே உலகை சுற்றி வந்து கோவில்லே சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து கோவில்லே, கூறும் போது, இச்சாதனை படைக்க நான் 10 ஆண்டுகள் கடுமையாக உழைத்தேன் என்றார். பிரான்சிஸ் ஜோயனின் இச்சாதனையை முறியடிக்க 5 முறை முயற்சி செய்து தற்போது வெற்றி பெற்றுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *