அறுபது வயதுக்கு மேற்பட்ட ஒன்ராரியர்கள் தற்போது கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Drug Mart, Rexall, Loblaws and Costco ஆகிய மருந்தகங்களில் கொரோனா தடுப்பூசியை ஒன்ராரியர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒன்ராரியோவின் கொரோனா தொற்றுக்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொதுசுகாதார துறையின் தலைமை வைத்திய அதிகாரி தெரேசா டாம் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான அதிகரிப்பின் அடிப்படையிலேயே இந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதோடு ஆய்வொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்