60 ஆண்டு காலப் பகுதிக்குள் கனேடிய நகரங்களின் காலநிலை முற்றுமுழுதாக மாற்றத்தை பதிவு செய்யும்

312

எதிர்வரும் 60 ஆண்டு காலப் பகுதிக்குள் கனேடிய நகரங்களின் காலநிலை முற்றுமுழுதாக மாற்றத்தை பதிவு செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் 540 நகரங்களில் தற்போதைய காலநிலைக்கும் இன்னும் 60 ஆண்டுக்கு பின்னரான கால நிலைக்கும் இடையில் பாரிய வேறுபாட்டை உணர முடியும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எட்மென்ரன் நகரில் தற்பொழுது சராசரி வெப்பநிலை 15 பாகை செல்சியஸ் ஆக காணப்படுகின்றது எனினும் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் வெப்பநிலை 5 பாகை செல்சியஸ் ஆனால் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறே ரொறண்டோ, ஒடவா, மொன்றியல் போன்ற நகரங்களின் சராசரி வெப்பநிலை முறையே 2.9, 6.1, 9.5 பாகை செல்சியார் உயர்வடையும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நேச்சர் கொம்யூனிகேஷன்ஸ் என்னும் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட புவியியல் ஆய்வு அறிக்கையில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
கனடாவின் பெரும்பாலான நகரங்கள் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பத்துடன் கூடிய கால நிலைகளை பதிவு செய்யும் என்றும் இந்த ஆய்வின் மூலம் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *