முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சுற்றுலா மையம் ஒன்றில், நீரில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் வகையில் தாய் மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்

803

ரொரன்ரொவுக்கு வடககே அமைந்துள்ள நீச்சல் தடாகத்துடனான புத்தூக்க விடுமுறைச் சுற்றுலா மையம் ஒன்றில், நீரில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் வகையில் தாய் மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

ஒன்ராறியோவின் Collingwoodன் மேற்கே அமைந்துள்ள Mountain Springs எனப்படும் குறித்த அந்த சுற்றுலா விடுதியில், நேற்று இரவு 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்கிருந்து மீட்கப்பட்ட குறித்த அநத் தாயும் மகளும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்கள் உயிரிழந்து விட்டதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகள் இன்னமும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதனால் இன்று புதன்கிழமை முற்பகல் வரையில் மேலதிக தகவல்களை எதிர்பார்க்க முடியாது என்று விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் பெயர் வயது உள்ளிட்ட விபரங்களோ, அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற விபரங்களோ உடனடியாக கிடைக்கப்பெறவில்லை.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *