முக்கிய செய்திகள்

7 பேரையும் மனிதாபிமானத்துடன் விடுதலை செய்ய வேண்டும்

28

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும்  மனிதாபிமானத்துடன் விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைக் கருத்தில் கொண்டு,  மனிதாபிமானத்துடன் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட டி.ஆர்.பாலு,  குடியரசு தலைவர் இதுதொடர்பாக விரைந்து  முடிவை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *