முக்கிய செய்திகள்

7 விருதுகளை வென்ற தமிழ்த்திரையுலகம், 67வது தேசிய திரைப்பட விருதுகள்

949

இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.   2019ஆம் ஆண்டுக்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள் (67th National Film Awards) அறிவிக்கப்பட்டுள்ளது.   இதில், மொத்தம் 7 விருதுகளை தமிழ்த்திரையுலகம் வென்றுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா நெருக்கடியால் கிட்டத்தட்ட ஓராண்டு தாமதமாக இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டன.

தேசிய விருதுகள்  முழு விவரம் வருமாறு:


சிறந்த தமிழ்ப்படமாக வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படங்களுக்கான விருது தயாரிப்பாளருக்கே வழங்கப்படும். அசுரன் படத் தயாரிப்பாளர் – கலைப்புலி தாணு இந்த விருதை பெறுகின்றார்


நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய் மற்றும் தனுஷ் முறையே இந்தி திரைப்படம்  ‘போன்ஸ்லே’ மற்றும் தமிழ் திரைப்படமான ‘அசுரன்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.


நடிகை கங்கனா ரனாவத் ‘மணிகர்னிகா: ஜான்சி ராணி’ மற்றும் ‘பங்கா’ படங்களுக்காக  சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.


சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான  விருது  விஜய் சேதுபதிக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.


விஸ்வாசம் படத்திற்காக சிறந்த  இசையமைப்பாளர் விருது- டி. இமான் 

சிறப்பு திரைப்பட விருது: ஓத்தா செருப்பு அளவு 7 (தமிழ்)
ஒத்த செருப்பு  திரைப்படத்துக்காக ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிக்கலவை விருது  வழங்கப்பட்டு உள்ளது.


சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது  கருப்புதுரை படத்தில் நடித்த நாக விஷாலுக்கு கிடைத்து உள்ளது.

சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான விருது இந்தி திரைப்படமான ‘கேசரி’ படத்தின் ‘தேரி மிட்டி’ பாடலுக்காக பி பிராக்கிற்கு செல்கிறது

.
சிச்சோர் ‘சிறந்த இந்தி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.


மலையாளப்படமான  மரக்கார் அரபிகடலிண்டே சிம்ஹம் படம்  சிறந்த திரைப்படம், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட், சிறந்த ஆடை வடைவமைப்பு(சுஜித் மற்றும் சாய்)  ஆகிய 3 விருதுகளை பெற்றுள்ளது. 

தெலுங்குபடமான மகரிஷி சிறந்த பொழுதுபோக்கு , சிறந்த பிரபலமான திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. மேலும் இந்த படத்திற்காக சிறந்த நடன அமைப்பு விருதை ராஜு சுந்தரம் பெற்று உள்ளார்.


சிறந்த அறிமுக படத்திற்கான இந்திரா காந்தி விருது மாதுக்குட்டி சேவியர் இயக்கிய ‘ஹெலன்’ (மலையாளம்) படத்திற்கு செல்கிறது

சிறந்த  சண்டைபயிற்சி : அவனே ஸ்ரீமன்னாராயணா (கன்னடம்)  படத்திற்காக விக்ரம் மோர்


சிறந்த பாடல்: பிரபா வர்மா  கோலாம்பி  (மலையாளம்)  

சிறந்த பின்னணி இசை: பிரபுதா பானர்ஜி ஜெயேஷ்தோபுட்ரோவுக்கு (பெங்காலி) 


சிறந்த ஒப்பனை கலைஞர்:  ரஞ்சித்   (  ஹெலன் – மலையாளம்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: ஆனந்தி கோபால் (மராத்தி)


சிறந்த படத்தொகுப்பு : ஜெர்சி (தெலுங்கு)


சிறந்த ஆடியோகிராபி: ஐவ்டு (காசி)


சிறந்த திரைக்கதை (அசல்): ஜெயேஷ்தோபுட்ரோ (பெங்காலி)

சிறந்த திரைக்கதை (தழுவல்): கும்னாமி (பெங்காலி)


சிறந்த திரைக்கதை (வசனம்): தாஷ்கண்ட் பைல்ஸ் (இந்தி)

சிறந்த ஒளிப்பதிவு: கிரிஷ் கங்காதரன் ஜல்லிக்கட்டு படம்  (மலையாளம்)


சிறந்த பெண் பின்னணி பாடகர்: சவணி ரவீந்திரா பார்டோ (மராத்தி) படத்திற்கு 

சிறந்த இயக்கம்: பஹத்தார் ஹூரைன் (இந்தி) படத்திற்காக சஞ்சய் புரான் சிங் சவுகான்


சிறந்த குழந்தைகள் படம்: கஸ்தூரி (இந்தி)

சுற்றுச்சூழல் குறித்த சிறந்த படம்: நீர் அடக்கம் (மோன்பா)


சமூக பிரச்சினைகள் குறித்த சிறந்த படம்: ஆனந்தி கோபால் (மராத்தி)


தேசிய ஒருங்கிணைப்பு குறித்த சிறந்த படம்: தாஜ்மஹால் (மராத்தி)




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *