அறப்போராளி அம்பிகை செல்வகுமாரின் சாகும்வரையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் லண்டன் கிங்ஸ்பெரி பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் 8ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அவரது உடல்நிலை சோர்வடைந்திருந்த போதும் அவர் தனது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் தான் இப்போராட்டத்தினை கைவிடப்போவதில்லை என்று உறுதிபடக் கூறி போராட்டத்தினை தொடர்ந்தார்.
இதேவேளை, அவருடைய போராட்டத்திற்கு உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஆதரவுகள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.
மேலும், அம்பிகையின் போராட்டத்தினை மேலும் வலுப்படுத்தும் வகையில் மெய்நிகர் வழியில் பல்வேறு உரைகளும் இடம்பெற ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.