முக்கிய செய்திகள்

8 காவல்துறையினரைத் திருப்பி அனுப்புக

44

மியான்மரில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அடைக்கலம் தேடியுள்ள, 8 காவல்துறையினரைத் திருப்பி அனுப்புமாறு மியான்மார் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

மியான்மரில் இராணுவ ஆட்சி ஏற்பட்டதை அடுத்து, மியான்மர் காவல்துறையை சேர்ந்த 30 அதிகாரிகள் குடும்பத்துடன், இந்தியாவின் மிசோராமில் அடைக்கலம் தேடியுள்ளனர்.

இவ்வாறு தப்பிச் சென்ற 8 காவல்துறையினரை மட்டும் திருப்பி அனுப்பும்படி மியான்மர் இராணுவ அரசாங்கம், இந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்படுவதாக, இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *