90 வீதமான கனேடியர்கள் போலிச் செய்திகளின் பொறியில் சிக்கி விடுகின்றனர் என அண்மைய கருத்துக் கணிப்புக்களின் மூலம் தெரியவந்துள்ளது.
முகநூல் ஊடாகவே அதிகளவில் போலியானச் செய்திகள் பரிமாறிக்கொள்ளப்படுவதாக கருத்துக் கணிப்பில் பங்கேற்ற கனேடியர்குள் தெரிவிக்கின்றனர்.
இணையத்தின் ஊடாக போலிச் செய்திகளை 90 வீதமான கனேடியர்கள் நம்பி விடுவதாக அண்மைய கருத்துக் கணிப்புக்களின் மூலம் தெரியவந்துள்ளது.
போலிச் செய்திகளுக்கு ஏமாறும் நபர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் ஏனைய நாடுகளை விடவும் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து வீதமான கனேடியர்கள் அடிக்கடி போலிச் செய்திகளை நம்பும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றார்கள் என குறிப்பிடப்படுகிறது.
சமூக ஊடகங்கள் தொடர்பிலான நம்பகத்தன்மை வீழ்ச்சியடைந்து செல்வதாக பெருவாரியான மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.


Previous Postசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Next Postமுஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்