அமெரிக்காவினால் வெனிசுவேலா மக்களுக்கு அனுப்பி வைக்கும் மனிதாபிமான உதவிகளைக் கொண்ட பாரஊர்திகள் கொலம்பிய எல்லையை அடைந்துள்ளது.
வெனிசுவேலாவின் அரச தலைவர் நிகலஸ் மடுரோவின் தலைமையிலான இராணுவத்தினர் குறித்த பாரஊர்திகள் நாட்டு எல்லைக்குள் பிரவேசிப்பதனை நிராகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குய்டோ தாமே நாட்டின் இடைக்கால அரச தலைவர் என்று சுய பிரகடனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச உதவிகள் இன்றி பெரும் எண்ணிக்கையிலான வெனிசுவேலா பிரஜைகள் உயிரிழக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக குய்டோ சர்வதேச சமூகத்திடம் உதவி கோரியிருந்தார்.
இதன் அடிப்படையில் அமெரிக்க அரசாங்கம் மனிதாபிமான உதவிகள் அடங்கிய ஒரு தொகுதி பாரஊர்திகளை வெனிசுவேலாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.
எனினும், இந்த பாரஊர்திகளை வெனிசுவேலா ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.





