கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இத்தாலியில் நத்தார் மற்றும் புத்தாண்டுக் காலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை காலகட்டத்தில் அவசியமற்ற கடைகள், உணவகங்கள், மதுபானசாலைகள் மூடப்பட்டு, நாடு சிவப்பு வலய கட்டுப்பாடுகளின் கீழ் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வேலை, சுகாதாரம், அவசர காரணங்களுக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி இத்தாலிய பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தீவிரமாக கவலைப்பட்டனர். அதற்கேற்ப நாங்கள் செயற்பட வேண்டியிருக்கிறது. இது கடினமான முடிவு என்று கூறியுள்ளார்.





