வெளிநாட்டு வானொலி நிகழ்ச்சி கேட்ட வடகொரிய கப்பல் தலைவர், பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
வடகொரிய இராணுவத்தில் தொலைத்தொடர்பு இயக்குனராக பணியாற்றி ஒய்வுபெற்ற சோய் என்பவர், மீன்பிடி கப்பலின் தலைவராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது, கப்பலில் வெளிநாட்டு வானொலி அந்நிகழ்ச்சிகளை கேட்டுள்ளார்.
தென்கொரியாவில் இருந்து ஒளிபரப்பாகும் வானொலி அலைவரிசையை அவர் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இவரது கப்பலில் வேலை செய்து வந்த ஒருவர், அளித்த தகவலை அடுத்து, சோய் வடகொரிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார்.
துறைமுகப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் முன்னிலையில் அவரிடம், விசாரணை நடத்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக துறைமுகத்தில் அனைத்து ஊழியர்களின் முன்னிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.





