கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை இறக்குமதி செய்வதை துரிதப்படுத்துமாறு நிபுணர்கள் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் மருந்துகளை சிறிலங்காவுக்கு கொண்டுவருவது குறித்து ஆராய்வதற்காக கொரோனா இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே நியமித்த குழுவே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ள மருந்துகளே கொரோனா வைரசினை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தற்போதுள்ள ஒரேயொரு வழி என்பதால் மருந்துகளை சிறிலங்காவுக்கு கொண்டுவருவதற்காக நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என நிபுணர்கள் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரித்த மருந்தினை பெறுவதற்கு சிறிலங்கா தயாராகவுள்ளது என உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அறிவிக்கவேண்டும் எனவும் மருத்துவ நிபுணர்கள் இராஜாங்க அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளது.





