இந்திய நீச்சல் வீராங்கனையான, சியாமளா கோலி பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் முயற்சியில் இன்று ஈடுபட்டுள்ளார்.
47 வயதுடைய தெலங்கானாவைச் சேர்ந்த சியாமளா கோலி என்ற வீராங்களை இன்று காலை தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி நோக்கி நீந்திக் கடக்கும் முயற்சியில் இறங்கினார்.
30 கிலோமீற்றர் தூரம் கொண்ட பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் இந்த முயற்சியை, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கொடியை அசைத்து வைத்து, ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்திய நீச்சல் வீராங்கனை சியாமளா கோலிக்கு சிறிலங்காவில் உள்ள இந்திய தூதரகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.





