கனடா வொண்டர்லாண்டில் உள்ள புதிய தடுப்பூசி மையத்தில், இன்று தொடக்கம், பதிவுகளை மேற்கொள்வதற்கு யோர்க் பிராந்தியம் அனுமதி வழங்கியுள்ளது.
இன்று காலை 8.30 மணிக்கு இந்தப் பதிவுகள் ஆரம்பமாகும் என்றும், வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலேயே பதிவுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி மையம் திங்கட்கிழமையில் இருந்து முழு அளவில் அதிகாரபூர்வமாக திறக்கப்படும் என்றும், தினமும், 1600 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, யோர்க் பிராந்தியத்தில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், யோர்க் பிராந்தியத்தில் வசிக்கும் அல்லது பணியாற்றும், உயர் மற்றும் அதிஉயர், மிக அதிஉயர் முன்னுரிமை சுகாதார பராமரிப்பு பணியாளர்கள், அத்தியாவசிய சேவை பணியாளர்கள் மற்றும் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் முதல் தடுப்பு மருந்தை பெறாதவர்கள், மற்றும் மூத்தோர், உள்ளிட்ட முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கே தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




