கனடாவின் பிரதிப் பிரதமரும், நிதி அமைச்சருமான கிறிஸ்ரியா பிறீலன்ட் (Chrystia Freeland) அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹரிசுடன், முதல்முறையாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியுள்ளார்.
இந்த உரையாடலின் போது, மத்திய அமெரிக்காவில் இருந்து புலம்பெயர்வோர், கொரோனா தொற்றின் பாதிப்புகள், சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்கள் தொடர்பாக இரண்டு தலைவர்களும் ஆராய்ந்துள்ளனர்.
இந்த கலந்துரையாடலில் புலம்பெயர்தல் ஒரு முக்கியமான விவகாரமாக கலந்துரையாடப்பட்டது என்று, கனடாவின் நிதி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்வோரின் ஓட்டத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு, தலைமை தாங்குவதற்கு கமலா ஹரிசின் பெயரை புதனன்று அமெரிக்க ஜனாதிபதி பைடன் முன்மொழிந்திருந்தார்.
இதையடுத்தே அவர் கனடாவின் துணைப் பிரதமருடன் பேச்சு நடத்தியுள்ளார்.





