முக்கிய செய்திகள்

Bloorcourt Villageஇல் கத்திக் குத்துச் சம்பவத்தில் காயமடைந்த பதின்மவயது இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

469

Bloorcourt Villageஇல் உள்ள McDonald’s துரித உணவகத்தினுள் இன்று காலை இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் காயமடைந்த பதின்மவயது இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Bloor Street மற்றும் Ossington Avenue பகுதியில் அமைந்துள்ள McDonald’s துரித உணவகத்தினுள், இன்ற அதிகாலை 1.45 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்தப் பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் நிலை ஏற்பட்டதாகவும், அதன் போதே அவர்களில் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன்போது அடி வயிற்றுப் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்கான அந்த இளைஞர் உடனடியாகவே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அங்கிருந்து Ossington Avenueவில் தெற்கு நோக்கி அவர்கள் தப்பியோடிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், இதேவேளை அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்ப ஒளிப்பதிவு ஆதாரங்களையும் ஆராய்ந்து வருவதாகவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *