முக்கிய செய்திகள்

Glen Park பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்

464

ரொரன்ரோ Glen Park பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Marlee avenue மற்றும் Eglinton avenue பகுதியில், இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த அந்த பகுதியில் தெற்கு நோக்கி சென்றுகெர்ணடிருந்த சரக்கு ஊர்தி ஒன்று, சுமார் 50 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணை மோதிவிட்டு அங்கு நிற்காது சென்றுள்ளதாகவும், அந்த வழியே சென்று ரொரன்ரோ போக்குவரத்து கழக பேரூந்து ஒன்றின் சாரதியே சம்பவம் தொடர்பில் காவல்துறைக்கு தெரியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், அங்கு உயிராபத்தான நிலையில் காணப்பட்ட அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போதிலும், அவர் சிகிச்சைககள் பலனின்றி சிறிது நேரத்தின் பின்னர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *