முக்கிய செய்திகள்

Greektown பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று மீட்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

448

இன்று மாலை Greektown பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று மீட்கப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Danforth avenue மற்றும் Logan avenue பகுதியில், இன்று மாலை ஐந்து மணியளவில் குறித்த அந்த பொதி கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அந்த சந்தேகத்திற்கிடமான பொதி காணப்படடதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தித் துறைகளைச் சேர்நத சிறப்பு பிரிவு வரழைக்கப்பட்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த மாதம் Danforth பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டோர் நினைவுகூரப்பட்ட இடத்திற்கு அருகே இருந்த குப்பை தொட்டி ஒன்றினுள்ளேயே இந்த சந்தேகத்திற்கிடமான பொதி போடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து அந்த பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்த அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *