BREAKING NEWS

Marie Catherine Colvin,

1181

இவர் இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்த பொழுது செய்தியாளராகப் பணியாற்றியிருந்தார். இலங்கை அரசப் படையினரின் தாக்குதலில், 2001, ஏப்பிரல் 16 அன்று “RPG” வெடிப்பில் சிதறிய துண்டு ஒன்று கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டதில் இருந்து ஒரு கறுப்புக் கண்மூடி அணிகிறார். இவர் “பத்திரிகையாளர், பத்திரிகையாளர்” என்று கூவியதால் இவர் மீது தாக்குதல் நடந்தது

தான் ஒரு கண்ணை இழக்க நேர்ந்த தாக்குதலை பிற்பாடு மருத்துவமனையில் இருந்த போது இவ்வாறு விவரித்தார்:

“நான் கீழே விழுந்தவுடன் மறைவிடம் தேடி தரையில் படுத்தபடி நகர ஆரம்பித்தேன். என் மேல் யாரோ நகர்வது தெரிந்தது – என்னைப் பாதுகாக்கவா அல்லது அவரின் பதட்டமா என்று தெரிவில்லை. அப்புறம் நான் தனியானேன் – செடிகளின் பினனால். பத்து யார்டுகள் தள்ளி ஒரு மரம் இருந்தது ஆனால் அது வெகு தொலைவென பட்டது. வெடி வெடித்துக்கொண்டே இருந்தது. பார்க்க இயலாத ஒரு இராணுவக் கம்பமொன்றிலிருந்து வெளிச்சம் வந்த வண்ணம் இருந்தது. அங்கிருந்து வந்த ஒரு தோட்டா என்னைத் தாக்கியது. மிகுந்த வலி, சப்தம் மற்றும் தோல்வியினை என்னுள் செலுத்தியது. என் கண்கள் தாக்கப்பட்டுள்ளன என்று எண்ணினேன். என் விழியிலும் வாயிலும் இருந்து குருதி மண்ணில் வடிந்தது. இறக்கப் போகிறோம் என்பதில் மிகுந்த வருத்தம் அடைந்தேன். தலையில் அடிபட்டால் வெகு நேரம் கழித்தே இறப்பு நேரும் என்று தோன்றியது (என் கண்ணைத் தாக்கியது ஒரு கூரான பொருளாகும்). “ஆங்கிலம்… ஆங்கிலம் யாரேனும் அறிவீரா” என்று சப்தமிடத் தொடங்கினேன். இன்னும் வெடி வெடித்தது. அவை அனைத்தும் அரை மனதுடனேயே நிகழ்த்தப்பட்டன. உணர்ச்சிவயப்பட்டு அந்த ராணுவத்தினரும் கத்திக்கொண்டிருந்தனர். அவர்களும் என்னைப் போலவே பயந்திருந்தனர்.”

சிறீலங்காவில் நடந்த போரில் கடைசி நாட்களில் நிகழ்ந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்களை கோல்வின் நேரில் பார்த்தவர்களில் ஒருவராவார். இருதரப்புக்கு இடையே இயங்கிய தொடர்பாளராகவும் இருந்தார்

2011 இல், லிபியாவில் நடந்த உள்நாட்டுப் போரைப் பற்றி அங்கிருந்து செய்தி அறிவித்த போது இவரையும், இவரோடு இருவரையும் முஆம்மர் கடாபி தன்னை நேர்காணல் செய்ய அழைத்திருந்தார். இவருடன் ஏபிசியைச் சேர்ந்த கிறித்தீன் அமான்ப்பூர் பிபிசியைச் சேர்ந்த செரமி போவன் ஆகியோரையும் அழைத்துச் சென்றார்பெப்பிரவரி 2012 இல் கோல்வின், சட்டப்படி இல்லாமல் மோட்டோகிராசு ஈராழி உந்தில் சென்று சிரியா அடைந்தார். அங்கே நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்ய வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்குச் சிரிய அரசு அனுமதி அளிக்கவில்லை. கோல்வின், சிரியாவின் ஓம்சு நகரத்தின் மேற்கு பாபா அமர் (Baba Amr) என்னும் இடத்தில் இருந்தார். அங்கிருந்தே அவர் செயற்கைத் துணைக்கோள் தொலைபேசிவழி தன் கடைசி செய்தி அலைபரப்பையும் பெப்பிரவரி 21 அன்று பிபிசி, சானல்4, சிஎன்என், ஐடிஎன் நியூசு ஆகியவற்றுக்குத் தந்தார்

கோல்வினும், பரிசுகள்-வென்ற பிரான்சிய ஒளிப்படக்கலைஞர் இரெமி ஓக்லிக்கும் (Rémi Ochlik) பெப்பிரவரி 22, 2012 அன்று சிரிய அரசின் ஏவுகனைத் தாக்குதலில் கொல்லப்பட்டனர் உடன் இருந்த, உயிர் தப்பிய, பத்திரிகையாளர் இழான் பியர் பெரென் கூற்றின்படி, அவர்கள் பயன்படுத்திய செயற்கைக்கோள் தொலைபேசியைக் கொண்டு இடத்தை அறிந்து சிரிய படைத்துறையினரால் தாக்கப்பட்டனர் பெப்ரவரி 22, 2012 அன்று மாலை ஓம்சு நகர் மக்கள் தெருக்களில் கோல்வின், ஓக்லிக்கு இறந்ததற்கு அஞ்சலி செலுத்துமாறு துக்கம் கடைப்பிடித்தனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *