Mimico பகுதியில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

438

ரொரன்ரோ Mimico பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் வாணிப நிலையம் ஒன்றில் இன்று காலையில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Lake Shore Boulevard மற்றும் Mimico Avenue பகுதியில் அமைந்துள்ள செவின் லெவின்(7-Eleven) வாணிப நிலையத்திலேயே இன்று அதிகாலை 3.30 அளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொள்ளை இடம்பெற்ற வேளையில் குறித்த அந்த வர்த்தக நிலையம் திறந்திருந்ததாகவும், கொள்ளையிட்ட நபர் அங்கிருந்து கால்நடையாக தப்பியோடிச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவத்தின் போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், எவ்வாளான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன என்பது குறித்து இன்னமும் ஆய்வு செய்து வருவதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர் குறித்த தகவல்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், சிறப்பு விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *