முக்கிய செய்திகள்

NAFTA உடன்பாட்டிலிருந்து கனடாவை வெளியேற்றிவிடப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்

478

NAFTA உடன்பாட்டிலிருந்து கனடாவை வெளியேற்றிவிடப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ள அவர், புதிதாக மாற்றியமைக்கப்படும் NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டிலிருந்து கனடா அகற்றப்படும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார்.

குறிப்பாக தற்போது பேச்சுவார்த்தைக்கு உள்ளாகியிருக்கும் NAFTA இணக்கப்பாட்டின் விதிமுறைகள் அமெரிக்காவுக்கு நியாயமானதாக இல்லாவிட்டால், அதனை இல்லாது செய்துவிடப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன் குறித்த இந்த வர்த்தக இணக்கப்பாட்டினுள் கனடாவை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்ற எந்தவித அரசியல் தேவைப்பாடும் தனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ள போதிலும், முன்னாள் அதிபர் பில் கிளிங்டனால் கைச்சாத்திடப்பட்ட குறித்த அந்த இணக்கப்பாட்டை இல்லாது செய்வதற்கோ அல்லது அதிலிருந்து கனடாவை வெளியேற்றுவதற்கோ ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை எனவும் கூறப்படுகிறதது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *