முக்கிய செய்திகள்

NAFTA குறித்த மீள் பேச்சுவார்த்தைகள் கட்டாயம் அமெரிக்காவையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று கனடாவும் மெக்சிக்கோவும் வலியுறுத்தியுள்ளன

510

NAFTA எனப்படும் வடஅமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை குறித்த மீள் பேச்சுவார்த்தைகள் கட்டாயம் அமெரிக்காவையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று கனடாவும் மெக்சிக்கோவும் வலியுறுத்தியுள்ளன.

மெக்சிக்கோ நகரில் கனடா மற்றும் மெக்சிக்கோ நாட்டின் அதிகாரிகளுக்கு இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவைத் தவிரத்துவிட்டு, கனடாவும் மெக்சிக்கோவும் இணைந்து தனியான ஒரு வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மூன்று நாடுகளும் இணைந்ததாகவே இந்த உடன்பாடு அமைய வேண்டும் எனவும் இந்த கூட்டத்தின்போது முடிவு செய்யப்பட்டுளளது.

இதேவேளை NAFTA உடன்பாடு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் மீள் பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் விடுத்துள்ள அழைப்பினையும் கனடாவும் மெக்சிக்கோவும் நிராகரித்துள்ளன.

இவ்வாறான நடவடிக்கை முதலீடுகளை அழிப்பதாகவே அமையும் எனவும், இவ்வாறான ஒரு விதிமுறை இருக்குமாக இருந்தால் ஒரு சிறு தொகையைக் கூட முதலிடுவதற்கு எவரும் முன்வர மாட்டார்கள் எனவும் மெக்சிக்கோவின் பொருளாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்டும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்த்க்கது.

மாநாட்டின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டு்ளள கிறிஸ்டியா ஃபிறீலான்ட், NAFTA உடன்பாடு முத்தரப்பு உடன்பாடாக அமையவேண்டும் என்பதே கனடாவின் விருப்பம் எனவும், ஏற்கனவே கால் நூற்றாண்டு காலமாக இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்து வந்து்ளளது எனவும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *