முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கனடிய தமிழ் வானொலியின் கண்ணீர் வணக்கம்!!NDP முன்னாள் நாடளுமன்ற உறுப்பினருமான விளங்கிய போல் டிவார் தனது 56 ஆவது வயதில் காலமானார்.

541

புதிய ஜனநாயக கட்சியின் வெளிவிவாகர விமர்சகரும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினருமான விளங்கிய போல் டிவார் புற்றுநோய் காரணமாக தனது 56 ஆவது வயதில் காலமானார்.

ஈழத் தமிழர்கள் விடயத்தில் கனேடிய நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியேயும் குரல் கொடுத்திருந்தார்.
இலங்கைப் போர்க் குற்றங்கள் குறித்துச் சர்வதேச விசாரணை தேவையெனக் கோரும் பிரேரணையை போல் டுவர் கனடிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.ஆசிரியாராகவும், தொழிற்சங்கத் தலைவராகவும் இருந்த அவர், மூளை புற்றுநோயால் கடந்த ஒரு ஆண்டு காலமாக அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) உயிரிழந்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் மூளை புற்றுநோய் ஏற்படவே அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரின் உடல்நிலை தேறி வந்தது. இந்நிலையில் அவரது துணைவியார் மற்றும் இரண்டு மகன்மார் மத்தியில், வீட்டில் வைத்து அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.

2006ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரையில் ஒட்டாவா மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய அவர் , 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தனது நாடாளுமன்ற ஆசனத்தை இழந்திருந்தார்.

இதனை அடுத்து தொடர்ந்து உலக அமைதி, வன்முறை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு அதிகம் வலியுறுத்தி வந்ததுடன், வெளியுறவு விமர்சகராகவும் பெரிதும் பேசப்பட்டுவந்தமை குறிப்பிடத்த்ககது.ஓடவா மத்தி தொகுதியின் முன்னாள் என்டீபீ நாடாளுமன்ற உறுப்பினரான போல் டுவார் (Pயரட னுநறயச) புற்றுநோய் காரணமாக அவரது 56 ஆவது அகவையில் நேற்றுக் காலமானார்.
மூளைப் புற்றுநோயால் பீடிக்கப்பட்ட நிலையில் அவர் கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்தார். குணப்படுத்த முடியாத புற்றுநோய் தமக்கு ஏற்பட்டுள்ளதாக கடந்த ஜூனில் அவர் அறிவித்திருந்தார்.
2006, 2008, 2011 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் ஓடவா மத்தி தொகுதியில் வெற்றி பெற்ற அவர், என்டீபீயின் வெளியுறவு விவகார விமர்சகராகச் செயற்பட்டார்.
மனித உரிமைகள் விடயத்தில் உரத்துக் குரல் கொடுத்து வந்த டுவார், ஈழத் தமிழர்கள் விடயத்தில் கனேடிய நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியேயும் குரல் கொடுத்திருந்தார்.
இலங்கைப் போர்க் குற்றங்கள் குறித்துச் சர்வதேச விசாரணை தேவையெனக் கோரும் பிரேரணையை போல் டுவர் கனடிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன் இழப்பு குறித்து பிரதமர் ஜஸ்ரீன் ரூடோ முதல் அனைத்துத் தரப்பினரும் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *