முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

smoked trout மீன் உற்பத்திகள் விற்பனையில் இருந்து மீளப்பெறுகை

382

ஆபத்தான பக்ரீரியா இருக்க வாய்ப்புள்ளதால், smoked trout மீன் உற்பத்திகளை விற்பனையில் இருந்து மீளப்பெறுமாறு, கனடிய உணவு பரிசோதனை முகவர் அமைப்பும், கனடா சுகாதார அமைச்சும் விற்பனையாளர்களுக்கு அறிவித்துள்ளன.

கொலபூர் ஸ்பிரிங் வியாபாரக் குறியை( Kolapore Springs brand) கொண்ட smoked trout மீன்களையே விற்பனையில் இருந்து மீளப்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வகை மீன்களுக்கு கொடுக்கப்பட்ட உணவில் ஆபத்தான இரசாயனப் பொருள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், இந்த வகை மீன் உணவை உண்பவர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என்றும் அவ்வாறான பாதிப்புகளை எவரேனும் எதிர்கொண்டால் மருத்துவரை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீளப் பெறப்பட்டுள்ள மீன்களை வீடுகளில் இருந்து அகற்றி வீசுமாறும், அல்லது கொள்வனவு செய்த இடத்தில் திருப்பி ஒப்படைக்குமாறும் கனடிய உணவு பரிசோதனை முகவர் அமைப்பும், கனடா சுகாதார அமைச்சும் வலியுறுத்தியுள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *