முக்கிய செய்திகள்

Thorncliffe Park குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது

568

ரொரன்ரோ Thorncliffe Park குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Thorncliffe Park Drive மற்றும் Overlea Boulevard பகுதியில், நேற்று இரவு 11 மணிக்கு பின்னராக இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் செனறடைந்த போது, அங்கே வெற்றுத் தோடடாக்கள் காணப்பட்டதாக தெரிவித்துளள காவல்துறையினர், பொழுது விடிந்ததும் அப்பகுதியில் மேலதிக தடயங்கள் காணப்படுகின்றனவா என்று முழுமையாக ஆராய்வதற்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் வாகனம் ஒன்று, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், சந்தேக நபர்கள் குறித்த அடையாளங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *