முக்கிய செய்திகள்

Toronto சிட்டிசன் லேப் நிறுவனம் மீது சர்வதேச இரகசிய முகவர் நிறுவனமொன்று அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

252

ரொறண்றோவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் டிஜிட்டல் உரிமைகள் அமைப்பான சிட்டிசன் லேப் நிறுவனம் மீது சர்வதேச இரகசிய முகவர் நிறுவனமொன்று அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஊடகவியலாளரான ஜமால் கசோக்கீ படுகொலைச் சம்வபம் தொடர்பிலான தகவல்களை இந்த சிட்டிசன் லேப் நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய மென்பொருள் ஒன்றைப் பயன்படுத்தி ஜமால் கசோகீயின் நெருங்கிய வட்டாரத்தினர் உளவு பார்க்கப்பட்டதாக கனேடிய ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டிருந்தனர்.
கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் இரண்டு தடவைகள் இந்த நிறுவனத்தைச் சேர்ந்த நபர்கள் இரகசியமான முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறான மோசமான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாக சிட்டிசன் லேப் நிறுவனத்தின் பணிப்பாளர் சுழn னுநiடிநசவ தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *