கனடாவின் அரச இலச்சினையில் பூர்வ குடிகளின் எவ்வித அடையாளங்களும் பிரதிபலிக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவின் கடவுச்சீட்டு, போர் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் பொறிக்கப்படும் கனேடிய அரச இலச்சினையில் பூர்வ குடியினர் தொடர்பிலான பிரதிநிதித்துவம் கிடையாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், அரச இலச்சினையில் பூர்வ குடியினரை பிரதிபலிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தும் நோக்கிலான இணையத்தின் ஊடான மகஜர் ஒன்றில் கையொப்பங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
120 நாட்களில் அதிகாரபூர்வமாக 500 கையொப்பங்களை திரட்டி அதன் ஊடாக அரசாங்கத்திடமிருந்து உத்தியோகபூர்வ பதில் ஒன்றை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக கல்வியியலாளரும் சமூக ஆர்வலருமான சுயனெழடிh ளூசழகநட தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விடயங்களை மேற்கொள்ளாது நாட்டில் பூர்வ குடியினருக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த முடியாது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.





