ஒன்டாரியோ அரசாங்கத்தின் சுற்றுச் சூழல் குறித்த திட்டத்திற்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை என்று அண்மைய கருத்துக் கணிப்புக்கள் மூலம் தெரியவந்துள்ளது.
முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு கென்சர்வேடிவ் கட்சியின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு திட்டம் தொடர்பில் உடன்பாடு கிடையாது என்று பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
டக்போர்ட் தலைமையிலான அரசாங்கம் கார்பன் தொடர்பான கெப் என்ட் ட்ரேட்(ஊயி யனெ வசயனந) திட்டத்தை இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றம் குறித்த மாகாண அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்திற்கு பொதுமக்களின் பூரண ஆதரவு கிடைக்கப் பெறாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
காலநிலை மாற்றம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே ஒன்டாரியோ மக்களின் நிலைப்பாடாக உள்ளது என்றும் அக்கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.





