இலங்கையில் கொரோனா வைரஸ் பரவிச் செல்வதைத் தடுப்பதற்காக
அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4
ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.
அதேவேளை, ஆயிரத்து 33 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று
சிறிலங்கா காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்துக்குள் மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை மீறிய
குற்றச்சாட்டில் 533 பேரும் 98 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று
சிறிலங்கா காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.





