வவுனியா மாவட்டத்தில் தமிழர் பகுதிகளான சேமமடு, செட்டிக் குளம், ஒதியமலை ஆகியவற்றில் 1984ஆம் ஆண்டு 80குடும்பங்கள் சிங்கள இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதன் 36ஆவது நினைவு நாள் இன்றாகும்.
இன்றைய நாளில் படுகொiலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான அஞ்சலிகளை செய்வதற்குரிய நடவடிக்கைகள் செட்டிக்குளத்தில் ஏற்பாடு செய்யபட்டிருந்தபோதும் காவல்துறையினர் அங்கு சென்று நினைவேந்தலுக்கு தடை விதித்ததோடு எச்சரிக்கையும் செய்யுள்ளனர்.
இதேவேளை, செட்டிக்குளத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான ஆத்மசாந்திப் பூசைகள் செய்யப்பட்டது.
இதில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொண்டிருந்ததோடு நினைவேந்தல் தடுக்கப்பட்டமைக்கு கடுமையான கண்டனத்தினையும் வெளியிட்டிருந்தார்.





