மஹாராஷ்டிராவை சேர்ந்த, ஆரம்ப பாடசாலை ஆசிரியரான, ரஞ்சித் சின்ஹ திசேல், சர்வதேச அளவில், சிறந்த ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு ஒரு மில்லியன் டொலர் பரிசு வழங்கப்படவுள்ளது.
லண்டனைச் சேர்ந்த, வர்க்கி அறக்கட்டளை, சர்வதேச அளவில், கல்விப் பணியில் சிறப்பான சேவை செய்து வரும் ஆசிரியரை ஆண்டு தோறும் தேர்ந்தெடுத்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருதுக்கு, 140 நாடுகளைச் சேர்ந்த, 12 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர்
இவர்களில் மஹாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில், பரித்வாடி கிராமத்தை சேர்ந்த, ஆரம்ப பாடசாலை ஆசிரியரான, ரஞ்சித்சின்ஹ திசேல், இந்த ஆண்டுக்கான, சிறந்த ஆசிரியராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனக்கு கிடைத்துள்ள 1 மில்லியன் டொலர் பரிசுத் தொகையில், பாதியை, இறுதி சுற்றுக்கு தெரிவான, ஒன்பது ஆசிரியர்களின் கல்வி பணிக்காக பகிர்ந்தளிக்க போவதாக, அறிவித்தார்.





