உடன்பாடுகளை சீனா மீறியதே, எல்லைப் பிரச்சினைக்கு காரணம் என, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்த கருத்துக்கு சீனா மறுப்புத் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், கருத்து வெளியிடுகையில்,“ இரு தரப்பு உடன்பாடுகளை சீனா எப்போதும் முழுமையாக கடைப்பிடித்து வருகிறது.
எல்லைப் பிரச்சினைகளுக்கு பேச்சு மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும் சீனா உறுதியாக உள்ளது.
பிராந்தியம் மற்றும் எல்லைப் பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
அதே நேரத்தில், எங்கள் எல்லையை, இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம்.
ஏனைய நாடுகளைப் போலவே, நாங்களும் எல்லையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.





