ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 23ஆம் நாள் தொடக்கம் முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தண்ணீர் மற்றும் உலர்பழங்கள் மட்டும் சாப்பிட்டு வருகிறார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு முருகனின் அறையை சிறை அதிகாரிகள் சோதனையிட முயன்ற போது, எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறைச்சாலை அதிகாரி செய்த முறைப்பாட்டை அடுத்து, காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக முருகனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 3ஆம் நாளும், முருகன் மீது இதேபோன்ற ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் முருகனை தனி அறையில் அடைக்க முடிவு செய்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.





