ஆப்கானிஸ்தானின், கந்தஹார் மாகாணத்தில், அரசுப் படையினரின் தாக்குதலில், 90 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், இதனை மறுத்துள்ள தலீபான் பயங்கரவாத அமைப்பு, கந்தஹாரில் எந்த மோதல்களிலும் தாங்கள் ஈடுபடவில்லை என்றும், யாரும் தமது தரப்பில் உயிரிழக்கவில்லை என்றும், தெரிவித்துள்ளது.
நம்பிக்கையிழந்துள்ள தமது படை வீரர்களுக்கு பொய்யான உறுதிமொழிகளை கொடுக்கும் உக்திகளில் ஒரு பகுதியாக இதுபோன்ற செய்திகளை ஆப்கானிஸ்தான் இராணுவம் வெளியிடுகிறது என்றும் தலீபான் அமைப்பு கூறியுள்ளது





