விண்ட்சர்-எசெக்ஸ் சுகாதாரப் பிரிவுப் பகுதியிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுகாதாரப் பிரிவின் சுகாதார அலுவலர் வைத்தியர் வாஜித் அஹமட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவனாது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது கொரோனா நிலைமைகளை அடியொற்றியதாகவே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் வின்ட்சர் மற்றும் எசெக்ஸ் பகுதியில் உள்ள பாடசாலைகள் முதற்கட்டமாக டிசம்பர் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூடப்பட வுள்ளதோடு குளிர்கால விடுமுறைகள் உரிய திகதியில் ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.





