திருகோணமலை வலயத்தில் உள்ள பாடசாலைகள் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் இதற்கான பணிப்புரை விடுத்துள்ளார்.
திருகோணமலை நகரப் பகுதியில் 15 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையிலேயே பாடசாலைகளை மூடுமாறு, அனைத்து அதிபர்களுக்கும் அறிவிக்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வவுனியாவில் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள், இன்று முதல் மீண்டும் இயங்கும் என்று வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைவாக, வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்துக்கு உட்பட்ட 5 பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அப்பாடசாலைகள் மீண்டும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல் பிரகாரம் இன்று முதல் திறக்கப்பட்டு, கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.





